சன் டி.வியில் காலையில்
11 மணிக்கு சீரியல் ஆரம்பம் ஆகுது.
3 மணி வரை சீரியல்.
(இடையில் அரை மணி நேரம் செய்தி).
ஆக மொத்தம் 7 சீரியல்கள்.
3 மணியிலிருந்து 5.30 வரை ஒரு படம்
(அனேகமா அது கேப்டன் படமா தான் இருக்கும்).
5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் சீரியல்கள் (இடையில் அரை மணி நேரம் செய்தி)
மொத்தம் 10 சீரியல்கள்.
மதியம் 3.30 மணி நேரம். இரவில் 5 மணி நேரம்.மொத்தம் 8 மணி நேரம்
30 நிமிடங்கள் வரை சீரியல்கள் மட்டும் தான்.
கூட்டி கழித்து பார்த்தால், 17
சீரியல்களை ஒரே நாளில்
பெண்கள் பார்க்கிறார்கள்.
எனக்கு தெரிந்து 'நாதஸ்வரம்' சீரியல் மட்டும் 3 வருடங்கள் தாண்டி ஓடிட்டு இருக்கு.
அப்போ 17 சீரியல்களும்
வருடக்கணக்கா ஓடிட்டு இருக்கு.
ஆக, ஒவ்வொரு சீரியலின் கதையையும்,
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வருடக்
கணக்கா பாலோ பண்ணிட்டு வராங்கன்னா, நம்மூர் பெண்களுக்கு எவ்வளவு ஞாபக
சக்தி இருக்கும்...??
அதே சமயம், ஒரு நாளில் தூங்குவது போக
மீதமுள்ள 12 மணி நேரத்தில் கிட்ட தட்ட 9 மணி நேரமும் சீரியல் பார்த்தே போகுதுன்னா,
(சீரியல் தொடர்ந்து பார்க்கும்
பெண்களுக்கு மட்டும்) அந்த குடும்பம் எப்படி விளங்கும்...?
இது மிக வஞ்சகமான, அறிவை மழுங்கடிக்க செய்யும்
செயல்னு இன்னுமா இவங்களுக்கு புரியல...??
No comments:
Post a Comment