அர்ச்சனை:
குமரனுக்குச் செய்வார் கோயிலில் அர்ச்சனை,
குழந்தைக்குச் செய்வார் வீட்டிலே அர்ச்சனை,
மாமியார் செய்வார் பகலிலே அர்ச்சனை,
மருமகள் செய்வாள் இரவிலே அர்ச்சனை,
முப்பதில் தொடங்கும் மனிதனின் அர்ச்சனை,
நாற்பதில் தொடரும் மனைவியின் அர்ச்சனை,
எவர் செய்தாலும் எழிலாகும் அர்ச்சனை,
என்றும் பயன்தரும்! செய்வீர் அர்ச்சனை...
அப்பா செய்தார் ஆயிரம் அர்ச்சனை.
அனுதினம் நடக்கும் ஆறுகால அர்ச்சனை.
அர்ச்சனை கேட்டேன் அடியேன் வளர்ந்தேன்,
அனுபவம் பெற்றேன் அத்தனையும் உண்மை!,
உணவின் அருமை பசித்தால் தெரியும்,
உறவின் அருமை இழந்தால் தெரியும்!
அப்பாவின் அருமை இருக்கையில் தெரியவில்லை,
அது தெரிந்தபோது அவர் இருக்கவில்லை!
குமரனுக்குச் செய்வார் கோயிலில் அர்ச்சனை,
குழந்தைக்குச் செய்வார் வீட்டிலே அர்ச்சனை,
மாமியார் செய்வார் பகலிலே அர்ச்சனை,
மருமகள் செய்வாள் இரவிலே அர்ச்சனை,
முப்பதில் தொடங்கும் மனிதனின் அர்ச்சனை,
நாற்பதில் தொடரும் மனைவியின் அர்ச்சனை,
எவர் செய்தாலும் எழிலாகும் அர்ச்சனை,
என்றும் பயன்தரும்! செய்வீர் அர்ச்சனை...
அப்பா செய்தார் ஆயிரம் அர்ச்சனை.
அனுதினம் நடக்கும் ஆறுகால அர்ச்சனை.
அர்ச்சனை கேட்டேன் அடியேன் வளர்ந்தேன்,
அனுபவம் பெற்றேன் அத்தனையும் உண்மை!,
உணவின் அருமை பசித்தால் தெரியும்,
உறவின் அருமை இழந்தால் தெரியும்!
அப்பாவின் அருமை இருக்கையில் தெரியவில்லை,
அது தெரிந்தபோது அவர் இருக்கவில்லை!
No comments:
Post a Comment