Thursday, 19 December 2013

தெரிந்து கொள்ளுங்கள்

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே
ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை
வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள்
இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை
முடிவெடுங்கள்

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.
பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு
வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்
பாதி உலகத்தை வலம் வந்துவிடும்

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத்
தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும்
தம் பங்கை நடிக்கிறார்கள்

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது
வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன்
பணிபுரிவர்

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக்
கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், 
நாம் பிறரைச்  சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான்
சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால்
எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச்
செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச்
சிந்திக்க வைக்கிறது.

Thursday, 21 November 2013

தமிழக அமைச்சர்

தமிழக அமைச்சர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தார். 
அமெரிக்கா அதிபர் வீட்டை பார்வையிட்டவர் அவரிடம் கேட்டார், 
‘இவ்ளோ பெரிய வீட்டை எப்படி சார் கட்டுனீங்க’. 
அதற்க்கு அமெரிக்கா அதிபர் சொன்னார், ‘அதோ 
அங்கே தெரியுதுல்ல மேம்பாலம், 
அதுல வந்த கமிஷன வச்சி தான் 
இந்த பெரிய வீட்டை கட்டினேன்...


அதன் பின் அமெரிக்கா அதிபர் 
தமிழக வந்தபோது, அதே அமைச்சரின் 
வீட்டை பார்த்து மிரண்டு போனார். அமைச்சரிடம் கேட்டார், 
என் வீட்டை விட நீங்க பெருசா வீடு கட்டி இருக்கீங்களே, 
நீங்க எப்படி கட்டுனீங்க?’. அதுக்கு அமைச்சர், 
அத்தோ தெரியுதுல்ல மேம்பாலம்..’ என்று கை காமித்தார். 
அதிபர் பார்த்துவிட்டு, ‘எங்கே..எந்த மேம்பாலமும் என் கண்ணுக்கு 
தட்டுபடலையே..எங்க இருக்கு மேம்பாலம்..’. 
என்று கேட்டார். அதுக்கு அமைச்சர், ‘ஆங்..அங்க மேம்பாலம் 
கட்ட வேண்டிய காசுல தான் நான் இந்த வீட்டை கட்டி இருக்கேன்..’
 என்றார். அமெரிக்கா அதிபர் ஆடி போனார்.

Monday, 11 November 2013

பிச்சைக்காரன்

பச்சைவிளக்கு
எரிவதை
கோபத்துடன் பார்த்தான்
சிக்னலில் நிற்கும் வாகனங்களில்
பிச்சை எடுக்கும்
பிச்சைக்காரன்..!

Wednesday, 9 October 2013

சாதிகளை ஒழிப்பது

LKG Application முதல்,

MNC Appointment Order வரை,

உள்ள விண்ணப்பங்களில் 
ஜாதி என்ற ஒரு வார்த்தை 
இல்லாமல் இருப்பதில்லை...

அப்பரோம் எங்க சாதிகளை ஒழிப்பது...

Wednesday, 7 August 2013

விஜய் ரசிகர்கள்

நள்ளிரவு நேரம்...
கடலில் ஒரு படகு
போய்க் கொண்டிருந்தது அதில் மூன்று
நடிகர்களின் ரசிகர்கள் பயணம் செய்து
கொண்டிருந்தார்கள்...

1.விஜய் ரசிகன்
2.அஜித் ரசிகன்
3.சூர்யா ரசிகன்

திடீரென்று ஒருபேய் படகில் வந்து
குதித்தது. மூன்று பெரும் நடுங்கி
போனார்கள். பேய் தன் கோரமான பல்
வரிசையை காட்டி சிரித்தது...

"உங்கள் மூன்று பேர்களையும் சாப்பிட போகிறேன்" என்றது.மூன்று பெரும்
தங்களுடைய உயிர்களை காப்பாற்றிக் கொள்ள
பேயிடம் கெஞ்சினார்கள்....
ஆனால் பேய் ஒரு நிபந்தனை
விதித்தது."உங்களில் ஒருவனாவது
புத்திசாலியாக இருந்தால்
உயிர் பிச்சை கொடுப்பேன்...

அதை நிரூபிக்க இப்போது ஒரு சோதனை.
நீங்கள் மூன்று பேரும் ஒவ்வொருவராய்
கடலில் எதையாவது தூக்கி போடவேண்டும்.

அதை நான் எடுத்து வந்து விட்டால் நீங்கள்
தோற்று போனதாய் அர்த்தம். "மூன்று பேரும் ஒப்புக்கொண்டனர்
சூர்யா ரசிகன் தன் கையில் போட்டிருந்த
மோதிரத்தை எடுத்து கடலில் வீசினான்.
பேய் உடனே கடலில் குதித்து அதைத் தேடி
எடுத்து வந்தது...

அஜித் ரசிகன் தன் கழுத்தில் இருந்த செயினை கழற்றி கடலில் வீசினான். பேய்
அதையும் தேடி பிடித்து கொண்டு வந்து
கொடுத்தது....

பேய் சிரித்தது.
"இரண்டு பேர் தோற்று விட்டார்கள்.
இனி மீதி
இருப்பது நீ மட்டும் தான். நீ எதை வீசப் போகிறாய்..?"

உடனே விஜய் ரசிகன் தன்னிடம்
இருந்த குடி தண்ணீர் பாட்டிலை எடுத்து,
அந்த கடலில் கொட்டி விட்டு.
"இந்த தண்ணீரை கொண்டு வா !"
என்றான்....பேய் திகைத்தது. ஓட்டம் பிடித்தது.
நீதி :-இந்த கதையின் நீதி என்னவென்றால்
பேய்'க்கே தண்ணி காட்டுபவர்கள் விஜய் ரசிகர்கள்...

Saturday, 27 July 2013

பல்பு

வாழ்க்கை ஃபிரைட் ஆ
இருக்க ஒரு ஐடியா...



1000 வாட் பல்பு 

வாங்கி மாட்டிக்கொங்கா...

இப்படி என் கிட்ட வாங்கதிங்கோ...

Thursday, 18 July 2013

கொஞ்சம் கேளுங்க

அப்பாவும் மகனும் டைனிங் டேபிளில்…

மகன்:- அப்பா நான் உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும், சொல்லலாமா?

அப்பா:- சாப்பிடும் போது பேச கூடாது, 
அது நல்லது இல்லைன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்…
பேசாம சாப்பிடு..அப்புறம் பேசலாம்..

சாப்பிட்டு முடித்த பிறகு…

அப்பா:- என்னமோ சொல்லலும்னு சொன்னியே இப்போ சொல்லுடா..

மகன்:- வேற ஒண்ணுமில்லப்பா..நீங்க சாப்பிட்ட சாம்பார்ல ஒரு பல்லி செத்து கிடந்தது. அத தான் சொல்ல வந்தேன்…

அப்பா:- ??????????
கருத்து:- பசங்க பேச்சையும் கொஞ்சம் கேளுங்க பெருசுங்களா...

Wednesday, 17 July 2013

மாமரம்

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, 
அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…?

மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் 
விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்..

டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை 
உங்க அப்பனா வந்து கொடுப்பான்?

மாணவன்:- கடல் நடுவுல போய் 
மாமரத்த  யார் வச்சது சார், உங்க அப்பனா?

டீச்சர்:- ?????????!!!!!!!!!!!

ஆதங்கம்

சிறியவனாக இருக்கும்போது
பெரியவன் ஆக ஆசை...

ஆனால் இப்போது
பெரியவன் ஆகியபோது
சிறியவனாகவே இருந்து இருக்க கூடாதா...

என்ற ஆதங்கம்
அந்த குழந்தை பருவம்
எவ்வளவு இனிமையாக இருந்தது...

இந்தியன்

இந்தியன் என்ற 
திமிரு எனக்கும் ரொம்ப இருக்கு....

Tuesday, 16 July 2013

பரீட்சை ஹால்

பரீட்சை ஹால் கீதோபதேசம்:
பதில் தெரியவில்லை என்று விழிப்பவனே!
எதை நீ படித்தாய் எழுதுவதற்கு?
எதை எழுதுவாய் ஆசிரியர் படிப்பதற்கு?
கேள்வி கேட்டவருக்கே பதிலும் தெரியும்!
இடையில் நீ யார் பதில் எழுத ?
நடந்தபரீட்சை எல்லாம் நாடகமே!
நடக்கும் பரீட்சை நாடகமே !
இனி நடக்கப் போகும் பரீட்சை களும் நாடகமே!
இடையில் நீ எழுதி என்ன சாதிக்கப் போகிறாய்?
எழுந்திரு!

கபாலி ஷோ உனக்காககாத்திருக்கிறது!!!

கடமையைச் செய்!!!

Wednesday, 10 July 2013

டிக்கெட்

ஆசிரியர் : என்கிட்டே நல்லா படிச்சவன் 
டாக்டராயிருக்கான்,சுமாரா படிச்சவன் பஸ்ல 
கண்டக்டராயிருக்கான்,இதுலயிருந்து என்னத்தெரியுது?

மாணவன் : ரெண்டு பேருமே, 
டிக்கெட் கொடுக்கிற வேலையிலயிருக்காங்கன்னு தெரியுது.

Thursday, 7 March 2013

விடை கிடைத்தது

இது நாள் வரை
புரியாமல் இருந்த புதிருக்கு
அன்று விடை கிடைத்தது…


நீயும் என்னை காதலித்ததை
காலம் கடந்து உணர வைத்தது…