Saturday, 25 April 2015

தொலைந்து போன சிந்துபாத்


முழுகியதை மீட்டுவிடலாமென்றும்
தொலைத்த கடலைத் தொட்டுவிடலாமென்றும்
தேடியலையும் நம்பிக்கைகளிலும் பதற்றத்திலும்
சிந்துபாத்களின் தோளில் எப்பவும் ஒரு முடக்கிழவன்...

அருகிலேயே கடல் கிடப்பதாக
பொய் சொன்ன கிழவன்
கடலோடு கப்பலொன்றும் கட்டித் தருவதாக
நம்பிக்கைகளைப் படரவிடுகிறான் 
உச்சித்தலையிலிருந்து,

பொய்யென்றோ மெய்யன்றோ பகுத்தறிய
கடல்புறத்து பழங்கிழவனின் 
உடல் மொழிகள் கீழிறங்கி வருவதில்லை...







முடுக்கிட இடுப்பிலுதைத்த கால்கள் 
சிந்துபாத்தின் உடலொட்டியொன்றாகி அபகரித்தது 
சிந்துபாத்தையும் அவனது கடலையும்

எல்லா திக்கும் சொல்லித் திரிகிறான்
பொய்க்கிழவன் தானே சிந்துபாத்தாக
மறந்துபோவதிலே இருத்தலடைபவர்களினிடையே 
இப்பொழுது கடலுமில்லை சிந்துபாத்துமில்லை
அவனது லைலா அடைக்கப்பட்ட பெட்டியுமில்லை

எல்லோரும் இப்பொழுதும் 
கன்னித்தீவு வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
சிந்துபாத்தின் மீதான தீராத வெறுப்புடன்.

Thursday, 2 April 2015

அப்பா

அண்ணன்களுடன் 
பிறந்த தங்கைகளுக்கு 
மட்டுமே தெரியும்...


அண்ணனுக்கு 
இன்னொரு பெயர் அப்பா என்று...