Thursday, 28 July 2016

A .P . J . அப்துல்கலாம்

வாழ்கையில்
வெற்றி பெற வேண்டுமானால்
நல்ல நண்பர்கள் தேவை
வாழ்நாள் முழுவதும்
வெற்றி பெற வேண்டுமானால்
ஒரு எதிரியாவது தேவை...
                                          

ஜொலிப்பேன்

சூரியனோடு
சேர முடியாவிட்டாலும்
சூரியனின் ஒளி பெற்று
ஜொலிக்கும் நிலவை போல
உன்னோடு சேர முடியாவிட்டாலும்
உன் அன்பை பெற்று நான் ஜொலிப்பேன்...

A .R . ரகுமான்

  அவமானங்களை சேகரித்து வை
வெற்றி உன்னை தேடி வரும்
                                                                 

டாக்டர். அப்துல்கலாம்

எல்லாப் பறவைகளும்
மழைக் காலங்களில்
கூடுகளில் அடையும்.
ஆனால் கழுகு,
மழையைத் தவிர்க்க
மேகத்துக்கு மேலாகப் பறக்கும்

டாக்டர். அப்துல்கலாம்

நெப்போலியன்

தோல்வி உன்னை
துரத்துகிறது என்றால்
வெற்றியை
நீ நெருங்குகிறாய் என்று அர்த்தம்....
                                                                             

ஹிட்லர்

ஜெயிப்பது
எப்படி என்று
யோசிப்பதை விட
தோற்பது எப்படி என்று
யோசித்து பார்
நீ ஜெயித்து விடுவாய்...
                                      

சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:

சில பயனுள்ள பொது அறிவு கேள்வி பதில்கள்:

1. ஒரு தடவை கூட லோக்சபாவிற்கு செல்லாத இந்திய பிரதமர் யார்?
திரு. சரண்சிங்.

2. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
ஜூன் 5.

3. மனித உடலில் வியர்க்காத பகுதி எது?
உதடு.

4. ஒரு ஹெக்டார் என்பது எவ்வளவு ஏக்கர்?
கிட்டத்தட்ட 2.5 ஏக்கர்.

5. வேர்க்கடலையின் அறிவியல் பெயர் என்ன?
அராக்கிஸ் ஹைபோஜியா.

6. பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விஷ்ணு சர்மா.

7. வருடத்தின் ஒரே நாளில் 24 மணிநேரத்தில் பகலும், இரவும் சரியாக
12 மணிநேரம் மட்டும் வருவது எந்த நாளில்?
மார்ச்சு 21.

8. மனித தலையில் உள்ள மொத்த எலும்புகள் எத்தனை?  22 .

9. ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
நாக்கு.

10. தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நூல் எது?
மோகனாங்கி.

11. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?
வெங்காயம்.

12. கவிஞர் கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
மூன்றாம் பிறை.

13. தமிழில் முதல் நாவல் எழுதியவர் யார்?
தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அவர் 1879ல் எழுதிய 'பிரதாப முதலியார் சரித்திரம்'தான் தமிழில் முதல் உரைநடை வடிவ நாவல்.

14. நமது இந்திய நேரம் எந்த இடத்தினை அடிப்படையாய் வைத்து கணிக்கப்படுகிறது?
அலகாபாத்.

Wednesday, 27 July 2016

கண்ணதாசன்

யார் என்ன சொன்னாலும்
உன் கொள்கையை மாற்றி
கொள்ளாதே
ஒரு சமயம் நீ  மாற்றினால்
ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும்....
                                                                                    

ஜொலிப்பேன்

சூரியனோடு
சேர முடியாவிட்டாலும்
சூரியனின் ஒளி பெற்று
ஜொலிக்கும் நிலவை போல
உன்னோடு சேர முடியாவிட்டாலும்
உன் அன்பை பெற்று நான் ஜொலிப்பேன்...

ஊழல்_வரிசை_பத்து

#ஊழல்_வரிசை_பத்து
ஊழல் செய்வதிலும்
கணக்கு எடுக்க வேண்டாமா ????

எல்லாவற்றிலேயும்
#டாப்_டென்_பார்த்தாச்சு...

இதிலும் பார்த்துவிடுவோம்...

இந்தியாவில் 12 ஆண்டுகளில்
நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா...

ரூ 80 லட்சம் கோடி!
அதாவது ரூ 1.80 ட்ரில்லியன்
என்று சமீபத்திய ஆய்வின்
மூலம் தெரிய வந்துள்ளது...
இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை'
இங்கே பார்க்கலாம்:

Case : 1 😭😭😭😭😭😭

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி
( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது....
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

Case : 2 😭😭😭😭😭

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி: இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!
இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.
சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

Case : 3😭😭😭😭😭😭

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!
மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.
இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

Case : 4 😭😭😭😭😭😭

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)
லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம். அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர். 2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

Case : 5 😭😭😭😭😭😭😭

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)
ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.
பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Case : 6 😭😭😭😭😭😭😭😭😭

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)
கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

Case : 7 😭😭😭😭😭😭😭😭😭

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)
தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.

Case : 8 😭😭😭😭😭😭😭😭
8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி) ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

Case : 9 😭😭😭😭😭😭😭

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி) உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

Case : 10😭😭😭😭😭😭😭😭

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி) பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.
இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள
ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது...
அனுபவிக்கட்டும்.

இப்போதைக்கு
வேறொன்றும் செய்வதற்கில்லை...
நான் படித்து மலைத்து போய்விட்டேன்...

நீங்களும் மலைக்க வேண்டாமா...
அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்...

SathishKumar KaviyaraSu

பகவத் கீதை

தன்னை அறிந்தவன்
ஆசை பட மாட்டான்
உலகை அறிந்தவன்
கோவ பட மாட்டான்
இந்த இரண்டையும்
உணர்ந்தவன்
துன்ப பட மாட்டான்...
                                           

Tuesday, 26 July 2016

அதிகப்பிரசங்கி

உங்க பையன்
ரொம்ப
அதிகப்பிரசங்கித்தனமாக பேசுறான்...

அப்படி என்ன பேசினான்:

வெங்காயத்தை
உரிச்சா கண்ணில
தண்ணீர் வரும்ன்னு சொன்னிங்க...

பெருங்காயத்தை
உரிச்சா என்ன வரும்னு கேட்கிறான் ?

லாட்ஜா

பள்ளிக்கூட திறப்பு
விழாவுக்கு நம்ம தலைவரைக்
கூப்பிட்டது ரொம்பத் தப்பா போச்சு....

எதனால?
வகுப்பு அறைகளைப் பார்த்துட்டு,
இதென்ன ரூம், ரூமா கட்டியிருக்கு,
லாட்ஜா ? -னு கேட்கிறார்....

பொறையா, பிஸ்கட்டா

உங்க வீட்டு 
முகவரியைக்
கண்டுபிடிக்கிறதுக்குள்ளே
நாயா அலைஞ்சுட்டேன்...
சரி உள்ளே வாங்க,
என்ன சாப்பிடறீங்க,

பொறையா, பிஸ்கட்டா ?

Monday, 25 July 2016

ஜொலிப்பேன்

சூரியனோடு
சேர முடியாவிட்டாலும்
சூரியனின் ஒளி பெற்று
ஜொலிக்கும் நிலவை போல
உன்னோடு சேர முடியாவிட்டாலும்
உன் அன்பை பெற்று நான் ஜொலிப்பேன்...

பல்பு

1 பேப்பர் 2 நிமிஷம்
எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...

1 கட்டை 10 நிமிஷம்
எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...

1 மரம் 2 மணி நேரம்
எரிஞ்சா சாம்பல் ஆயிடும்...

ஆனா.....
ஒரு பல்பு எவ்வளவு
நேரம் எரிஞ்சாலும் சாம்பல் ஆகாது.. 💡💡

Saturday, 23 July 2016

ஹார்லிக்ஸ்

ஹார்லிக்ஸ் பாட்டிலில்
சீனியை கொட்டி வைங்க,
வேண்டாம்னு சொல்லல,

தயவு செஞ்சு பூஸ்ட் பாட்டிலில்
மிளகாய் பொடியை கொட்டி வைக்க வேண்டாம்...

கலர் வித்தியாசம்
தெரியாம பூஸ்ட்ன்னு நினச்சு
ஒரு ஸ்பூன் எடுத்து வாய்ல போட்டேன்....

ஸ்ஸ்ஸ்...
அய்யோாா....
அம்மாாாா....
ஆத்தாாாா.... எரியுதே...
டூ மை மம்மி...

சிலர் அறிந்தும் பலர் அறியாத தகவல்கள்...


1.உலகப்புகழ் பெற்ற
மோனாலீசா ஓவியம்
இடது  கையால் வரையப்பட்டது.

2. எப்போதும்
காற்று வீசும் திசையிலேயே
தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை
முதல் முதலில் உருவாக்கிய
நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு
இல்லாமல் 100 நாட்கள் வாழும்....

5. ஒரு பென்சிலைக்
கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு
கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை
கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது
ஒரு நிறம் இல்லை அது
ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து
காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து
பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல்
முழுவதும் வியர்க்கும்
ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது.

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில்
தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட
பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய
ஜனாதிபதியாகிய அப்துல் கலாம்
சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட
சகாரா பாலைவனம் பெரியது"

வாழும் போதாவது

பிறக்கும்போது
தாயை அழவைக்கிறோம்...

இறக்கும்போது
எல்லோரையுமே அழவைக்கிறோம்...

வாழும் போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்...

Friday, 22 July 2016

தெறி2

கபாலி படத்தை Netல
பார்ப்பியா பார்த்துக்கே...
இல்லை திருட்டு VCDல
பார்ப்பியா பார்த்துக்கே...

ஆனால்
அந்த படத்தோட
நஷ்டத்தை #விஜய் படம்
தயாரிச்சு தான் எடுக்க முடியும்...

தானுக்கு எப்போவோ தெரியும்
அது தெறி2 கூட இருக்கலாம்...

எழுந்திரு பெண்ணே...
மூலையில் முடங்காதே ,
உலகம் உனக்கும் தான்...

முன்னேற வழி
கேட்காதே - கிடைக்காது...
முந்திச்சென்று முடிசூட்டு...
கல்வி அழைப்பிதலில்
அடகு வைக்க அல்ல...

சிந்தித்து சிகரம் தொடு....

நெருப்புடா

இன்று கபாலி படம் பார்க்கச்செல்வோர் ஆளூக்கொரு பக்கெட்டில் தண்ணீர் கொண்டு செல்லவும்...

ஆங்காங்கே...

நெருப்புடா_நெருப்புடா என்று அலறுவோர் மீது தண்ணீர் ஊற்றி அணைக்கவும்....

FirstDay Kabali

இன்று கபாலிய 500 / 1000
குடுத்து பாக்கப்போறவங்கள்ல
முக்காவாசி பயலுக,
ரெண்டு மாசம் முன்னாடி
தக்காளி 80, 100 ரூவாய்க்கு விற்கிறகுது...

நாங்க எப்படி பொழைக்கிறதுன்னு
பொங்குன பொங்க சோறுங்க தா....

Thursday, 21 July 2016

கணவன் கடன்காரன்

தன் கணவன்
பணக்காரனாக
இல்லாவிட்டாலும் பரவாயில்லை ,
கடன்காரனாக
இருக்கக்கூடாது
என்று நினைப்பவள்
தான்
உண்மையான மனைவி...

நெருப்பு

இனிய நெருப்பு வணக்கம்.

நுழைவுச்சீட்டு
கிடைக்காததால்,
தற்கொலை செய்து
கொள்பவர்களுக்கு,
மறுகாட்சிகள் உள்ளதைத்
தெரிவிக்காததே காரணமாக
இருக்க வேண்டும்...
.
ஒருமுறை
எடுத்த படத்தில்,
எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் காட்சிகள் மாறாது...

அரசு விடுமுறை

என்னடா இது.
தேதி காலண்டர்ல
இன்னைக்கு கபாலி ரீலீஸ்,
அரசு விடுமுறைன்னு ஒன்னும் போடல ?

Success

தோல்விகளை
எல்லாம் சரியான
முறையில் சேமித்துக்
கொண்டே வாருங்கள்...

ஒருநாள்
மிகப்பெரிய ரூபத்தில்
வெற்றியாய் திரும்பி வரும்...

தீபாவளி கபாலி

விடிய விடிய தீபாவளி 🎉🎊🎆🎇🎉🎊✨🎆

விடிஞ்சு பார்த்த கபாலி...🔥🔥🔥

குட்டி குட்டி குறுஞ்செய்திகளில் தோன்றும் மெலிதான சிரிப்பிற்காக......

மணிகளை நொடிகளாக்கி அலைபேசி அழும் வரை பேசும் பேச்சிற்காக.....

உன்னுடன் போடும் சண்டைகாக......

அதன் பின் வரும் அழுகைகாக.....

என்னை போலவே எனது அலைபேசியும் காத்திருக்கின்றது...

Wednesday, 20 July 2016

உச்சகட்டம்

1.ஃபேஷனின் உச்சகட்டம் ஜிப் வைத்த லுங்கி.
.
2.சோம்பேறித்தனத்தின் உச்சகட்டம் காலையில் நடைபயிற்சியின் போது லிஃப்ட் கேட்பது.
.
3.ஆர்வக்கோளறின்
உச்சகட்டம் வெள்ளைத்தாளை ஜெராக்ஸ் எடுப்பது.
.
4.நேர்மையின் உச்சகட்டம் கர்ப்பிணி, பஸ்சில் 2 டிக்கட் எடுப்பது.
.
5.நம்பிக்கையின் உச்சகட்டம் 99 வயது முதியோருக்கு வாழ்நாள் அழைப்புக்கு 300 ரூபாய் ரீசார்ஜ் செய்வது.
.
6.முட்டாள் தனத்தின் உச்சகட்டம் கண்ணாடி கதவில் சாவி துவாரம் வழியாக பார்ப்பது.
.
7.வேலை வெட்டி இல்லாததின் உச்சகட்டம் இந்த முழூசையும் பொறுமையாக படிச்சது.😉

கபாலி Vs TamilRockers.net

கபாலி 22/7/2016
மாலை 4மணிக்கு 5.1 Hd பிரின்ட் வெளியிடு
#TAMILROCKERS அதிகார அறிவிப்பு.

அடக்குனா அடங்குற ஆளா நீ  
😂😂😂😂😂

★ தாணு      -  இரண்டெழுத்து
★ கபாலி     -  மூன்றெழுத்து
★ ரஞ்சித்     -  நாலெழுத்து
★ நெருப்புடா -  ஐந்தெழுத்து
★ ரஜினிகாந்த் - ஆறெழுத்து
★ திருட்டு விசிடி - ஏழெழுத்து

இதுதான் இந்த படத்தோட தலையெழுத்து.

சென்னையில்
வெள்ளம் வந்தபோது
எனக்கென்னன்னு ரஜினி இருந்தாருல்ல...

அதே மாதிரி
கபாலி வரும்போது
நமக்கென்னன்னு இருக்குறவன்
மட்டும்தான் சோத்துல உப்பு போட்டு
திங்கற ரோசமுள்ள தமிழன்...

கபாலி திரைப்படம்
வெளிவந்த உடன் அனைவரும்
கீழே குறிப்பிட்டுள்ள தளங்களில்
தரவிரக்கம் (download) செய்து கொள்ளும்
மாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்...

Tamilrockers.com

Trmovies.in

Tamilwap.in

Www.Tamilplay.com

www.youjizz.com

முடிந்த அளவுக்கு ஷேர்
செய்து மற்றவர்களுக்கும் உதவுங்கள் 💥

காதலிச்சு
கல்யாணம்
பண்ணவங்க சந்தோசமா
வாழ்றாங்களோ இல்லையோ....

ஆனால்

கல்யாணம்
பண்ணிட்டு காதலிக்கிறவங்க
தான்  சந்தோசமா  வாழ்றாங்க...

ரஜினி

ரஜினி கஸ்ட்டபட்டு
நடுச்சுருக்காராம் அதனால
தியேட்டர்ல போய் தான் பார்க்கனுமாம்...

ரஜினி ஏன்
அவ்ளோ கஷ்டபடுரிங்க,
இங்க வாங்களேன்
விவசாயம் பாக்கலாம்...

எங்களுக்கு எல்லா
ஒரு கஷ்டமும் இல்ல...
நாங்க எல்லா ஜாலியா இருக்கம்பாரு....

ஆறு பேரு

ஒரே மாதிரி உலகத்துல
ஏழு பேர் இருப்பாங்களாம்...

நம்ம
நிலமையே
இவ்வளவு மோசமயிருக்கே....

மிச்சம் ஆறு
பேரு எந்த நாட்ல
எந்த தெருவுல பிச்சை
எடுத்துட்டு இருக்காங்களோ...

Tuesday, 19 July 2016

கபாலி

நா வந்துடன்னு சொல்லு...

திரும்பி வந்துடன்னு சொல்லு

கபாலி டிக்கெட்
600ரூபானு
சொன்னதும்
டிக்கெட்டுக்கு காசு
இல்லாம அப்டியே திரும்பி வந்துடன்னு சொல்லு....

கபாலி டா
காசு_இல்லடாஆ.....

முட்டாள் பட்டம்

முட்டாள் பட்டம்
கிடைப்பதற்கு அறிவு
இல்லாமல் இருக்கத்தேவையில்லை...

அதிக அன்போடு
இருந்தாலும் கிடைத்துவிடும்...

சன் டி.வி

சன் டி.வியில் காலையில்
11 மணிக்கு சீரியல் ஆரம்பம் ஆகுது.
3 மணி வரை சீரியல்.
(இடையில் அரை மணி நேரம் செய்தி).
ஆக மொத்தம் 7 சீரியல்கள்.

3 மணியிலிருந்து 5.30 வரை ஒரு படம்
(அனேகமா அது கேப்டன் படமா தான் இருக்கும்).

5.30 மணியிலிருந்து இரவு 11 மணி வரைக்கும் சீரியல்கள் (இடையில் அரை மணி நேரம் செய்தி)
மொத்தம் 10 சீரியல்கள்.

மதியம் 3.30 மணி நேரம். இரவில் 5 மணி நேரம்.மொத்தம் 8 மணி நேரம்
30 நிமிடங்கள் வரை சீரியல்கள் மட்டும் தான்.

கூட்டி கழித்து பார்த்தால், 17
சீரியல்களை ஒரே நாளில்
பெண்கள் பார்க்கிறார்கள்.

எனக்கு தெரிந்து 'நாதஸ்வரம்' சீரியல் மட்டும் 3 வருடங்கள் தாண்டி ஓடிட்டு இருக்கு.
அப்போ 17 சீரியல்களும்
வருடக்கணக்கா ஓடிட்டு இருக்கு.

ஆக, ஒவ்வொரு சீரியலின் கதையையும்,
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் வருடக்
கணக்கா பாலோ பண்ணிட்டு வராங்கன்னா, நம்மூர் பெண்களுக்கு எவ்வளவு ஞாபக
சக்தி இருக்கும்...??

அதே சமயம், ஒரு நாளில் தூங்குவது போக
மீதமுள்ள 12 மணி நேரத்தில் கிட்ட தட்ட 9 மணி நேரமும் சீரியல் பார்த்தே போகுதுன்னா,
(சீரியல் தொடர்ந்து பார்க்கும்
பெண்களுக்கு மட்டும்) அந்த குடும்பம் எப்படி விளங்கும்...?

இது மிக வஞ்சகமான, அறிவை மழுங்கடிக்க செய்யும்
செயல்னு இன்னுமா இவங்களுக்கு புரியல...??

Monday, 18 July 2016

சரவணன் மீனாட்சி

முன்னாடி எல்லாம்
மீனாட்சி -னு சொன்ன
எல்லாருக்கும் மதுரை
மீனாட்சியம்மன்
தான் ஞாபகம் வரும்...
.
.
ஆன இப்ப எல்லாம்
சரவணன் மீனாட்சி தான் ஞாபகம் வருது...

Sunday, 17 July 2016

வாழ்க்கை

விட்டுக் கொடுத்து
வாழ்வது மட்டும் வாழ்க்கையல்ல...

எந்த சூழ்நிலையிலும்
நாம் நேசித்த ஒருவரை
விட்டு விலகாமல் வாழ்வது
தான் உண்மையான வாழ்க்கை...

கவலை

இழந்ததை
நினைத்து கவலைபட்டுவதை
விட, புதிதாக இழக்கப்பட
இருப்பதை தடுப்பதற்கு
முயல்வது சிறந்தது....

Saturday, 16 July 2016

My Love

ஒரு வருஷம்
உன்னை பிரிந்து நான் வாழ்கின்றேன்...

உன்னை
நினைத்து தினம் சாகு கிறேன்...

அடுத்த ஜென்மம்
வரை நான் காத்திருப்பேன்...
என் காதலுக்கு நான் போராடுவேன்...

அடுத்த ஜென்மம் வரை நான் காத்திருப்பேன்...
என் காதலுக்கு நான் போராடுவேன்...

Friday, 15 July 2016

கும்பகோணம்_பள்ளி_தீ_விபத்து

கோவில்களின் நகரமாம்
கும்பகோணம்..?
பல தெய்வங்கள் பதவிசாக
பக்தர்களுக்கு காட்சியளிக்கின்ற
நகரமாம் அது..?
தெய்வங்கள் வாழும் நகரமல்ல...
நரகம் அது...

அட சண்டாளத் தெய்வங்களே...
கல்வி கற்க வந்து
கனி மொழி கூறும்
மழலைகள் தீயினில் கருகும் போது
எங்கே போய்த் தொலைந்தீர்கள்...

கல்லடா நாங்கள் கடவுளல்ல
என்று மதிகெட்ட மக்களுக்கு
மீண்டுமொருமுறை
'தீ'யிட்டுக் காட்டிவிட்டாய்

ஏ... 'தீ'யே...
உன் 'தீ' நாக்குகளை
ஒன்றுமறியா பிஞ்சுகளிடமா
காட்ட வேண்டும்..?

அத்தூய உள்ளங்களை
துடிக்கத் துடிக்க
'தீ'க்கிரையாக்கி விட்டாயே..?
அப்படி என்ன 'தீ'ப்பசி உனக்கு..?

உன் உக்கிரத்தை
வக்கிரமாக ஏன் குழந்தைகளிடம்
காட்டினாய்..?

பிஞ்சுகள் என்றும் எதிர்ப்பு காட்டது
என்ற எண்ணத்திலா
அப்படி எரித்தாய்..?

அம்மழலைகளைப் பெற்ற
பெற்றோர்களின்
கண்ணீரைக் கண்டாயோ..?
அது கல்லையும் கரைய வைத்து விடும்

அத்தனை உயிர்களையும்
உன் 'தீ'ய வயிற்றுக்கு
இரையாக்கிவிட்டு
ஏதும் நடவாதது போல்
இருக்கிறாயே..?

உனை ஓன்றும் செய்ய
முடியாது
என்ற இருமாப்பா...?

பெற்றோர்களை இழந்த பிள்ளைகள்தான்
அனாதைகளாகியதை
கேள்விப்பட்டிருக்கிறோம்...
அந்தோ உன்னால்
பிள்ளைகளை
இழந்து நாங்களல்லவா
அனாதைகளாகி விட்டோம்...

உன் வீரத்தை 'தீ'ரத்தை
இனியேனும்
குழந்தைகளிடம் காட்டாதே..?
ஒன்றுமறியா
ஏழைகளிடம் காட்டாதே?

'தீ'யோர்கள் இந்நாட்டினில்
(சு)தந்திரமாய்
திரிந்து கொண்டிருக்கிறார்கள்...

'தீ'விரவாதிகள் என்ற பெயரால்
போலி அரசியல்வாதிகள் என்ற பெயரால்
போதைச் சாமியார்கள் என்ற பெயரால்
இன்னும் எத்தனையோ
'தீ'யவர்கள்…

அவர்களிடம் உன் 'தீ'ரத்தை காட்டு
அவர்களை 'தீ'யிட்டழி
உலகம் உன்னை வாழ்த்தும்...

சிதைகளை மட்டுமே எரிக்க
உனக்கு உரிமையுண்டு
இனியேனும் உயிர் விதைகளை
எரிக்காதே...
எங்கள் வயிற்றினில்
'தீ'யினை மூட்டாதே...

(கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 94 மொட்டுக்கள் உதிர்ந்து 12-நினைவு நாள் (16.07.2010) இன்று. உயிர் நீத்த பிஞ்சுகளுக்கு என் கண்ணீர் அஞ்சலி...)