காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம் அடுத்து பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள காரை மற்றும் சீயட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளின் விளை நிலைங்களை புரோக்கர்கள், ரவுடிகள் துணை கொண்டு வீட்டு மனை விற்பனையாளர்கள் அனைவரும் சேர்ந்து விவசாயிகளை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கி மிகப் பெரிய தொழிலதிபர்களுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர்.
இந்த டார்ச்சரை தாங்காமல் விவசாயிகள் அனைவரும் தற்கொலை செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். பல குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியூர் செல்ல முடிவெடுத்து உள்ளார்கள். செல்லவும் தொடங்கி விட்டார்கள். இந்த கிராமத்தை நகரமயமாக்கல் கபளீகரம் செய்ய தொடங்கியுள்ளது. இந்த கிராமத்து மக்கள் இந்த செயல்பாட்டை விரும்பவில்லை. எங்களுக்கு பணம் முக்கியமில்லை விவசாயமே பிரதானம் என்று போராடி வருகின்றனர்.
ஆனால் பணமுதலைகள் போராட்டங்களை நசுக்கி விடுகிறார்கள்.
ஏற்கனவே ரியல் எஸ்டேட் முதலைகள் கபளீகரம் செய்தது போக குறைந்த விளை நிலங்களே உள்ளன. அவற்றையும் வளைத்துப் போட ரியல் எஸ்டேட் ஆட்கள் கிராமத்தை வலம் வருகிறார்கள்.
மாதவன் பிள்ளை என்ற விவசாயியின் 15 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டு அதில் இருந்த பனை மரங்களை தரைமட்டமாக்கி விட்டனர். விவசாயம் செய்யும் நிலங்களில் உள்ள பனை, தென்னை மரங்களையும் சாய்த்து விட்டு வாய்க்கால்களை மண் கொண்டு நிரப்பி வருகிறார்கள்.
குறைந்த விலைக்கு புரோக்கர்களிடம் விற்றே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். இந்த கிராம மக்களுக்கு விவசாயத்தை விட்டால் வேறு தொழில் தெரியாது.
ஊருக்குள் வளைக்கப்பட்ட நிலங்களில் முள்வேலி போடப்பட்டு உள்ளதால் ஆடுமாடுகளை மேய்க்க வழியில்லாமல் ஊரை சுற்றி போக வேண்டியிருக்கிறது. விவசாயம் செய்து கொண்டிருக்கும் நிலங்களுக்கும் தண்ணீர் வரும் வாய்க்கால்கள் அடைக்கப்பட்டு விட்டன. இது வரை அபகரிக்கப்பட்ட நிலங்களில் பாதிக்கும் மேல் நன்செய் நிலங்கள்.
இந்த கிராமத்தை காப்பாற்ற மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் போராட்டத்தை ரியல் எஸ்டேட் பணமுதலைகளின் மாயவலையை தாண்டி இதை மக்களிடமும் அரசிடமும் போய் சேர்க்க முடியாமல் தவிக்கிறார்கள்.
அவர்களுக்கு உதவும் முயற்சியாகவும், விளைநிலங்களை காப்பாற்றும் முயற்சியாகவும் நாம் இந்த விஷயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்பினால் போய்ச்சேர வேண்டியவர்களிடம் சேரும் என்று தான் பகிர்கிறோம்.
இந்த நிலத்தை காப்பாற்ற நீங்களும் இந்த பதிவை ஷேர் செய்து அதிக மக்களை இந்த விஷயம் சென்றடைய உதவுங்கள். பெருநகரத்திற்கு அருகில் இருப்பதால் விளை நிலங்களை ப்ளாட் போட்டு பணம் சம்பாதிப்பதை பெரிசா நினைக்காமல் விவசாயத்தை பிரதானமாக நினைக்கும் மக்களுக்கு உதவுவோம் இதை பகிர்வதன் மூலம்...
No comments:
Post a Comment