Wednesday, 6 July 2016

குரூப் அட்மின்

ஏம்பா தம்பி! 

படிப்பு முடிஞ்சு ஒரு வருஷம் ஆச்சு , 
எங்கையாவது வேலைக்கு சேர்ந்துட்டியா ??
எப்பவும் போனும் கையுமா இருக்க ?

அதுவா பெரியவரே ;

என் போன்ல பேஸ்புக் , வாட்ஸப் வசதி எல்லாம் இருக்கு, 

அதனால தான் எப்பவுமே அதியே இருக்கேன்.
பேஸ்புக்ல 3 குரூப் அட்மினா இருக்கேன், எனக்கு கீழ 5,000 பேர் இருக்காங்க. 

வாட்ஸப்புல 2 குரூப்புக்கு ஓனரா இருக்கேன்.

அடேங்கப்பா!

எப்படியும் மாசம் ஒரு லட்சம் தேறும் போல இருக்கே...
பரவாயில்லைப்பா! நல்லா இருப்பா. உங்க அப்பா தான் கூலி வேலை 

செஞ்சுக்கிட்டு கஷ்டப்பட்டுகிட்டு இருந்தாரு, நீயாவது ஓனர் ஆயிட்டியே! ரொம்ப சந்தோசம்பா ...

No comments:

Post a Comment