Thursday, 18 February 2016

மனதுக்குக் கிடைத்த வெற்றி

மனதுக்குக் கிடைத்த வெற்றி


வெயில், மழை, பனி, 
புயல் என அத்தனை இயற்கைச் 
சீற்றங்களை யும் வெட்டவெளியில் 
எதிர்கொள்ளும் அவர்களின் எளிய வாழ்க்கை...

என்னை வெகுவாகக் கவர்ந்தது. 
அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியது. 

அவர்களுடன் கலந்து பேசி அவர்களின் 
உரையாடல்களின் வழியாகத் தேவையான தரவுகளைச் 
சேகரித்துக்கொண்டு எழுதத் தொடங்கிவிட்டேன். 

எழுதி முடிக்கும் வரை கிட்டத்தட்ட என்னை நான் உணர்ந்தேன். 

அத்தகைய ஓர் உணர்வு இருந்ததால்தான்
இது புழங்காத பகுதி, புதிய வாழ்க்கைமுறை, 
பார்த்திராத நிகழ்ச்சிகள் என்ற தயக்கங்கள் இல்லாமல் எழுதமுடிந்தது. 

எனது படைப்பு மனதுக்குக் கிடைத்த வெற்றியாக நான் கருதுகிறேன்...

Saturday, 13 February 2016

விதிவிலக்கல்ல

காதல்...
அறிவாளிகளைக் கூட முட்டாள்களாக்கும்
அதிவேக ஆட்கொல்லி...
சாணக்கியர்களையும் சாட்சிகள் இல்லாமல்
சாதுர்யமாய் சாகடிக்கும் சாமர்த்தியசாலி...

தப்பிக்க வழி இருக்கின்றதா...?
காதலிக்க கூடாது என்று
தடைசட்டமா இயற்ற இயலும்...?

காதல் ஒரு எரிமலை போல
இளம் நெஞ்சங்களில் பற்றி எரிகிறது...
அணைத்திடத்தான்
ஆட்கள் உண்டோ...?

இல்லையே...,
தூண்டிவிடத்தான்
தூதுவர்கள் இருக்கிறார்கள்...
அன்றைய காலங்களில்.,
இளம் வயதினர்களுக்கு...
வேதனைகள் நிறைந்த
சோதனைக்காலமாய் இருந்திருக்கிறது...

காதல் எனும் வார்த்தைகளே
கொச்சையான வார்த்தையாய் இருந்திருக்கிறது...
மலர்களைத் தேடி அலைந்து
காதல் செய்ததெல்லாம் அந்தகாலம்...

ஆனால் இன்று..,
காலம் மாறிவிட்டது...
அரும்பு மீசை முளைப்பதற்க்குள்
ஆண்களுக்கு அரும்பிவிடுகிறது காதல்...

பருவவயதினை எட்டுவதற்குள்
பருகிட துடிக்கிறது பெண்களின் காதல்...
இதற்குப் பெயர்தான் காதல் என்பதா...?
இன்று..,

கொழுந்துவிட்டு எரியும் காதல் எரிமலையில்
அமிலத்தை ஊற்றுபவர்கள்தான் அதிகம்...
காதலை ஊக்குவிக்கும் கவிஞர்கள்..
காதல் பரப்பும் இணையதளங்கள்...

காதலை காப்பாற்றும் தொலைகாட்சிகள், அதில்..,
காதலை கற்றுத்தரும் திரைப்படங்கள்...

இப்போது..,
முகநூலிலும் முதலிடம் பிடித்திருக்கிறது...
" யாருக்கோ எழுதியவை..."
இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கல்ல...