பொய் சொன்னால்
கன்னத்தில் அறையும்
ரோபோட் ஒன்றை வாங்கிட்டு வந்தான் ஒருவன். இரவு உணவு உண்ணும்போது அதை டெஸ்ட் செய்து பார்ப்பது என்றெண்ணி மகனை கேட்கிறான்.
அப்பா: "இன்னைக்கு ஏன்டா ஸ்கூல்க்கு போகல?"
மகன்: "ஸ்கூல்ல தான் இருந்தேன் பா."
ரோபோட் பளீரென்று மகனுக்கு ஒரு அறை விட்டது.
அதிர்ச்சியடைந்த மகன்: "ஓகே, உண்மைய சொல்லிறேன். பிரண்ட்ஸ் எல்லாரும் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தோம்."
மீண்டும் ரோபோட் மகனுக்கு ஒரு அறை விட்டது
மறுபடியும் அதிர்ச்சியடைந்த மகன்: "அப்பா சாரி ப்ளீஸ். பிரண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து பார்ல தண்ணியடிச்சோம். அதான் ஸ்கூல்க்கு போகல."
அப்பா: "என்னது தண்ணியடிச்சியா? டேய் உன் வயசுலா எனக்கு குவார்ட்டர் எப்படி இருக்கும்ன்னு கூட தெரியாது."
இப்பொழுது ரோபோட் அப்பாவை ஓங்கி ஒரு அறை விட்டது.
இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த அவன் மனைவி நக்கலாக சிரித்துக்கொண்டே சொன்னாள்.
"ஹ்ம்ம், உங்களுக்கு பொறந்த பையன் உங்கள மாதிரியே இருக்கான்."
இப்பொழுது ரோபோட் அவன் மனைவியை ஓங்கி பளீரென்று ஒரு அறை விட்டது.
அடுத்த நாள்
முதல் வேலையாக அந்த
ரோபோட்டை OLX-ல்
விற்றுவிட்டான் கணவன்...
No comments:
Post a Comment