Friday, 26 August 2016

Love 6


உன் வார்த்தைகளில் என் வாழ்க்கையின்
அர்த்தங்களை உணர்கிறேன்...

அந்த அர்த்தங்கள் என் அமைதியான உள்ளத்தில்
அழகான ஆசைகளை அப்படியே ஆழமாக
வரைந்து விடுகின்றது ...

வரையப்பட்ட அந்த வார்த்தைகள்
வானவில்லின் வண்ணங்களை விடவும்
வர்ணிக்க முடியாத வரிகள்...

உன் காதலில் என் கண்களின்
மொழியை உணர்கிறேன்...

அந்த காதல் தான் என் காற்றோடு
கலந்து விட்ட காவியமாகி விட்டது
கடைசி வரை காவல் இருப்பேன்
உன் காதலுக்காக மட்டும்...

உன் நினைவுகள் இல்லாமல்
என் நிழல் கூட உயிர் வாழாது...

நிஜமான என் வாழ்க்கைக்கு
என்றுமே நீ வேண்டும்
நிரந்தரமாக மட்டுமல்ல
என் நினைவுகள் உன்னை விட்டு
நீங்கி விடும் வரை...

நீ இல்லை என் நிம்மதியும் இல்லை...

No comments:

Post a Comment