நமக்கென்று
கொண்டாட ஓரு தினமாம்...
நாம் தினம் தினம் கொண்டாடிக்கொண்டிருக்கும் போது...
நட்பின் மடியில் அமைதியாய் உறங்கும்,
ஆயிரம் கோடியில் நானும் ஒருவன்...
முகம் காணாமல் முகவரி,
அறியாமல் இணைந்த போதும்,
முகத்தில் அழியா தடம்,
பதித்து நிலைத்துவிட்டோம்...
பலரின் பெயர் கூட தெரியாமல்
நட்பெனும் ஓரே பெயரால் வாழ்கிறோம்...
தாய்மைக்கு நிகராக நிற்கும்
நட்புக்கு ஈடு இல்லை எவ்வுலகில்...
அகவைகள் ஐம்பதை கடந்தாலும்,
துள்ளும் மழலையாய்
நமை மாற்றிடும் உறவிது...
அழும் போது ஆறுதல் சொல்ல,
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்,
அழவே விடாத நம் நட்பில்
நாம் தொலைந்து போகின்றோம்...
😍 சதீஸ்குமார் கவியரசு. 😍
No comments:
Post a Comment