Tuesday, 12 April 2016

பறிமுதல்

என்னடா அது...
நீ இட்லி வாங்கீட்டு வருவேன்னு
வீட்டுல எல்லோரும்
காத்திருக்கோம், இவ்வளவு
நேரம் கழிச்சு வந்து ரேசன் கார்டு
கொண்டு போனாத்தான்
இட்லின்னு சொல்றே?"
"அதை ஏன் கேக்கறீங்க,
எதுக்கு 35 இட்லி
மொத்தமா வாங்கீட்டு போறே
நிச்சயமா வாக்காளர்களுக்கு
கொடுக்கத்தான்னு சொல்லி
பறிமுதல் பண்ணீட்டாங்க...


வீட்டுல கரண்ட்
இல்லாம மாவாட்டலை
அதனால கடையில
எல்லாருக்கும் இட்லி
வாங்கினென்னு
சொல்லியும் தேர்தல் அதிகாரி
கேட்கலை தகுந்த ஆவணம் கொண்டுவான்னு
சொல்லிடாங்க....



அதான்
இட்லிய மீட்டுட்டு வர
நம்ம ரேசன்
கார்டு கொண்டு போய் காட்டனும்....

No comments:

Post a Comment